திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே நரசிங்காபுரத்தில் ஜனவரி 31ஆம் தேதி அதிகாலை தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பழனிக்கு பாதயாத்திரை சென்ற பெண் பக்தர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்தார் இதனை அடுத்து உடுமலை போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக பாத யாத்திரை பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் பக்தர்களை ஓரமாக ஒதுங்கி இரண்டு பேர் வரிசைப்படி சென்றால் விபத்து ஏற்பட வாய்ப்பு இல்லை பாதுகாப்பாக தங்களது புனித பாதயாத்திரையை மேற்கொள்ளலாம் என்று பக்தர்களிடையே அறிவுறுத்தப்பட்டது மேலும் இரவு நேரங்களில் பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் ஒளிரும் பட்டைகள் பதித்த உடைகளை அணிந்து சென்றால் விபத்து ஏற்படுவதை தவிர்க்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment