திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அமராவதி செல்லும் பாதையில் திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை பணிக்காக ஒப்பந்த கனரக லாரிகள் வனப்பகுதியில் இருந்து மண் கொண்டு செல்லப்பட்டு வருகிறது . சுமார் 60-க்கும் மேற்பட்ட டிப்பர் லாரிகள் இரவு பகலாக ஓட்டி வருகின்றனர். இதுவரை மானுப்பட்டி அருகே பல விபத்துக்கள் நடந்துள்ளது.
ஆகையால் நேற்று அதிகாலையில் இரண்டு கனரக டிப்பர் வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதால் ஒருவர் உயிரிழப்பு . மற்றொருவர் படுகாயம் என தகவல் கிடைத்துள்ளது. இந்த பகுதியில் அதிகப்படியான விபத்துக்கள் நடந்துள்ளது மது போதையில் வட மாநில ஓட்டுனர்கள் இரவு நேரங்களில் வேகமாக கனரக வாகனங்களை இயக்குவதால் விபத்து ஏற்படுகிறது இதற்கு காவல்துறையினர் மற்றும் தாலுகா அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
- உடுமலை தமிழக குரல் செய்திகளுக்காக ஜெ .வைர பிரகாஷ்
No comments:
Post a Comment