இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டு காலமாக செயல்படாமல் இருந்த எம்ஜிஆர் மக்கள் இயக்கத்தை மீண்டும் செயல்பட துவக்கி உள்ளேன் இதில் முதல் கட்டமாக தற்பொழுது ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் திமுகவிற்கு தீவிர வாக்கு சேகரிக்க போவதாகவும் மேலும் வாக்கு சேகரிப்பின் போது முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் சாதனைகளை வாக்காளர்களுக்கு எடுத்துரைப்பேன் எனவும் தெரிவித்தார்.
மேலும் கடந்த சில ஆண்டுகளாக அதிமுகவில் இபிஎஸ் ஓபிஎஸ் இருவரின் அணிகளில் இருந்தபோது பல்வேறு மனக்கசப்புகளை சந்தித்தேன் குறிப்பாக இருவரும் சுயமரியாதை இல்லாமல் பாஜகவின் அனுதாபிகளாக செயல்பட்டு வருகிறார்கள் இதனால் தற்பொழுது நல்ல முடிவெடுத்து செயல்படாமல் இருந்த எம்ஜிஆர் இயக்கத்தை மீண்டும் செயல்படுத்தி இதன் மூலம் அதிமுகவில் அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து எம்ஜிஆர் மக்கள் இயக்கத்தை வலுப்படுத்துவேன் என தெரிவித்தார் பேட்டியின்போது இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மூர்த்தி மற்றும் அப்பாஸ் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment