திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூர் பேரூராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில், ரூபாய் 89 லட்சம் மதிப்பீட்டில், கான்கிரீட் சாலை, சாக்கடை கால்வாய் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்வில் திமுக திருப்பூர் மாவட்ட செயலாளர், திருப்பூர் மாநகராட்சி நான்காம் மண்டல தலைவர் இல.பத்மநாபன், மாவட்ட அவைத் தலைவர், மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா ஜெயராமகிருஷ்ணன், மடத்துக்குளம் மேற்கு ஒன்றிய செயலாளர், ஊராட்சி ஒன்றிய குழு துணை தலைவர் கே. ஈஸ்வரசாமி, கணியூர் பேரூராட்சி மன்ற தலைவர் செந்தமிழ்செல்வி, துணைத்தலைவர் ஜெய்னுல் ஆபிதீன் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மேலும் துறை சார்ந்த அதிகாரிகள், திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மடத்துக்குளம் செய்திகளுக்காக NA.திருநாவுக்கரசு.
No comments:
Post a Comment