நாட்டாமையே பொய் சொல்லலாமா? வீட்டை சுற்றி கம்பி வேலி போட்ட கொடுமை கதறும் ஏழைக் குடும்பங்கள். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 15 March 2023

நாட்டாமையே பொய் சொல்லலாமா? வீட்டை சுற்றி கம்பி வேலி போட்ட கொடுமை கதறும் ஏழைக் குடும்பங்கள்.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காசி லிங்கம் பாளையம் பகுதியில் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர் இப்பகுதியில் ஆதி திராவிட சமூகத்தை சேர்ந்த மயிலால் மற்றும் தெய்வானை என்ற இருவரும் தனித்தனியாக வெவ்வேறு வீடுகளில் தங்களது குடும்பத்தோடு வசித்து வருகின்றனர்.

கடந்த ஒரு மாதங்களுக்கு முன்பு கோவில் திருவிழாவிற்கு என்று கம்பி வேலி போடுவதாக கூறி மயிலால் மற்றும் தெய்வானை 2 பேரின் வீட்டைச் சுற்றி கம்பி வேலி போட்டுள்ளதாகவும் தற்போது வரை கம்பி வேலி படவில்லை என்றும் இதனால் குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைக்கு வெளியே செல்ல நீண்ட தூரம் சுற்றி வரும் நிலை உள்ளதாகவும் இது பற்றி உரிய அலுவலர்களிடம் முறையிட்டும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை அருந்ததிய சமுதாய மக்கள் என்பதாலேயே ஊர் நாட்டாமை ராமு தங்களை  இடையூறு ஏற்படுத்துகிறார்.


ஆகவே அவர் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு தங்கள் வீடுகளை சுற்றி அமைத்துள்ள கம்பி வேலியை அகற்றக்கோரி மயிலால் மற்றும் தெய்வானை குடும்பத்தார் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.


-  திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன் 

No comments:

Post a Comment

Post Top Ad