வட மாநில தொழிலாளர்கள் பிரச்சனை சம்பந்தமாக திருப்பூர் எம்பி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது அமைதி பூங்காவான தமிழ்நாட்டில் சிலர் கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு சமூக வலைதளங்களில் வட மாநில தொழிலாளர்களை தாக்குவதும் மற்றும் அச்சுறுத்துவதும் போன்று வீடியோக்களை பதிவிட்டதால் இது வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் வேகமாக பரவிய காரணத்தால் இதனால் அச்சமடைந்த வடமாநில தொழிலாளர்கள் தங்கள் ஊருக்கு செல்ல ரயில் நிலையங்களில் கூட்டம் கூட்டமாக சூழ்ந்தனர்.
இதனால் தமிழகம் முழுவதும் இந்த பதற்றம் தொற்றியது இதையொட்டி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திருப்பூர் மக்களோடு இணைந்து சகோதர சகோதரிகளாக வாழும் புலம் பெயர்ந்த வட மாநில தொழிலாளர்கள் பாதுகாப்பு குறித்து திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், திருப்பூர் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளருமான க.செல்வராஜ் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தொமுச மாநில துணைச் செயலாளரும், திருப்பூர் தெற்கு மாநகர செயலாளருமான டி கே டி மு.நாகராசன் மரியாதைக்குரிய திருப்பூர் மாநகர மேயர் என் தினேஷ் குமார் துணைமேயர் பாலசுப்ரமணியம் மற்றும் மாமன்ற உறுப்பினர்களும், மண்டல தலைவர்களும் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை செய்தனர்.
No comments:
Post a Comment