தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட பொள்ளாச்சி எம்பி முதலமைச்சரை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்றார், திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே பெருமாள் புதூர் கிராமத்தை சேர்ந்தவர் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் இவர் கடந்த மார்ச் 18 ஆம் தேதி மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு நாடாளுமன்ற விதிகளின்படி தென்னை வளர்ச்சி வாரிய உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதை முன்னிட்டு சென்னையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்களை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து தென்னை வளர்ச்சி வாரியத்தின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தற்கு நன்றி கூறி வாழ்த்துக்களை பெற்றார்.
No comments:
Post a Comment