தாராபுரம் சுந்தரம் அக்ரஹார தெருவில் ஹாஜியானா திருமண மண்டபம் முன்பு நகராட்சி சார்பில் குப்பைகள் கொட்ட கூடாது என்று அறிவிப்பு வைத்து கேமரா பொருத்தப்பட்டுள்ளது. நகராட்சி அறிவிப்பை பொருட்படுத்தாமல் அப்பகுதியில் ஒரு சிலர் வேண்டுமென்றே நகராட்சி வண்டியில் குப்பையை கொட்டாமல் ரோட்டில் கொட்டி செல்வதால் அருகில் உள்ள வீடுகளில் வாழும் மக்களுக்கு காய்ச்சல் போன்ற மர்ம நோய்கள் பரவி வருகின்றது.
ஆகையால் நகராட்சி நிர்வாகம் நகராட்சி அறிவிப்பு மீறி கொட்டும் நபர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குப்பை கொட்டுவது கட்டுப்படுத்தப்படும் என்று அப்பகுதி உள்ள பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment