இதனால் பாதிப்புக்கு உள்ளான அப்பகுதி பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் ஐந்தாவது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி தலைமையில் திருமுருகன் பூண்டி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர் அப்போது அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய அதிகாரிகளிடம் அத்தியாவசியத் தேவையான குடிநீரை முறையாக வினியோகம் செய்வதில்லை எனவும் பல்வேறு காரணங்களை காட்டி 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வழங்கப்படாமல் உள்ளது.
எனவே குடிநீர் விநியோகத்தை முறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் பூண்டி நகராட்சி தலைவர் குமார் மற்றும் அதிகாரிகள் குழாய் உடைப்பு ஏற்பட்டு இருப்பதால் குடிநீர் வினியோகம் செய்வதில் தாமதம் ஏற்படுவதாகவும் அதை உடனடியாக சரி செய்து குடிநீர் வழங்கப்படும் என்று உறுதியளித்தனர், இதை அடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
No comments:
Post a Comment