திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல அலுவலகத்தில் திருப்பூர் மாநகராட்சி மேயர் என் தினேஷ் குமார் வரிவசூல், சுகாதார வாகனங்களின் நடவடிக்கைகள் மற்றும் அலுவலகப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் திருப்பூர் மாநகராட்சி முருங்க பாளையம் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் நான்காவது மண்டல அலுவலகத்தில் துணை மேயர் பாலசுப்ரமணியம் நான்காவது மண்டல தலைவர் பத்மநாபன் மற்றும் மாநகராட்சி அலுவலர்களுடன் சென்று கட்டிட பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.
No comments:
Post a Comment