திருப்பூரில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில் சாலை பணியாளர்கள் தங்கள் உடலில் நாமும் போட்டு கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும் அதேபோல் சாலை பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வி திறன் பெறாத ஊழியர்களுக்கான ஊதிய மாற்றம் 5200 முதல் 20 ஆயிரத்து 200 வரை வழங்க வேண்டும்.
ஆனால் தற்போது 1900 மட்டுமே வழங்கப்பட்டு வருவதாகவும் அதேபோல் சாலை பணியாளர்களின் பணி நீக்க காலம் மற்றும் பணி காலத்திலும் உயிர் நீத்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமன வழங்க வேண்டும் மேலும் சாலை பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10% ஆபத்து படி நிரந்தர பயணப்படி சலவை படி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தினர் உடலில் பட்டை நாமம் போட்டுக் கொண்டு திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள கண்காணிப்பு பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
No comments:
Post a Comment