திருப்பூர் மாநகராட்சி 3,6,18,19 மற்றும் 23 ஆகிய வார்டுகளில் பல்வேறு இடங்களில், மேயர் ந.தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் ஜி.கிரியப்பனவர் இ.ஆ.ப. துணை மேயர் ஆர்.பாலசுப்ரமணியம் கழிவுநீர் வடிகால்கள், கழிவுநீர் தேங்கி நிற்கும் பகுதிகள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டனர்.
பொதுமக்களுக்கு இடையூறு தராத வகையில் வடிகால்களை முறையாக சுத்தம் செய்வது, தேங்கி நிற்கும் பகுதிகளை மாற்று வழி அமைத்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில் 2 ஆவது மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ் மற்றும் 1ஆவது மண்டல தலைவர் உமாமகேஸ்வரி வெங்கடாசலம் அவர்களும் மாமன்ற உறுப்பினர்கள் லோகநாயகி கருப்பசாமி, கோபால்சாமி, தாமோதரன், லதாமோகன், துளசி மணி நடராஜன் ஆகியோரும் வட்ட திமுக செயலாளர் மூர்த்தி, குணராஜ், மாநகராட்சி அலுவலர்களும் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ.காஜா மைதீன்
No comments:
Post a Comment