திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டலத்தில், 29வது வார்டில் ஓடக்காடு K.N.Pபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளியில் மாண்புமிகு மேயர் ந.தினேஷ்குமார் சுகாதாரம், பள்ளியின் தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, பள்ளியின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு பள்ளி குழந்தைகளுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டுகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் துணை மேயர் பாலசுப்ரமணியம் , பகுதி கழக செயலாளர் மியாமி அய்யப்பன், வட்ட கழக சுகுமார், மாமன்ற உறுப்பினர் சின்னச்சாமி , ஜெய்சங்கர் மற்றும் அரசு அலுவலர்களும் கழக நிர்வாகிகளும் மகளிர் அணி நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
- திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ. காஜாமைதீன்.
No comments:
Post a Comment