எடப்பாடி பழனிச்சாமி மீது போடப்பட்டுள்ள வழக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 17 March 2023

எடப்பாடி பழனிச்சாமி மீது போடப்பட்டுள்ள வழக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்.


திருப்பூரில் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மீது போடப்பட்டுள்ள வழக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி மீது மதுரையில் அமமுக கட்சி நிர்வாகி அளித்த புகாரின் அடிப்படையில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரக்கூடிய சூழ்நிலையில் திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக சார்பில் திருப்பூர் ரயில்நிலையம் அருகில் உள்ள தியாகி குமரன் நினைவகம் முன்பாக மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் விஜயகுமார் எம் எஸ் எம் ஆனந்தன் மற்றும் நிர்வாகிகள்  கலந்து கொண்டனர் திமுக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர் ஆர்ப்பாட்டத்தில் அதிமுக நிர்வாகிகள் அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

Post Top Ad