ஒட்டன்சத்திரம் - திருப்பூர் புறவழிச்சாலை குண்டடம் திருப்பூர் பிரிவு போலீஸ் செக்போஸ்டில் எஸ்ஐ பிரதாப் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக பைக்கில் வந்த 2பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார் அந்த நபர்கள் வைத்திருந்த கட்ட பையை வாங்கி சோதனை செய்தபோது பை முழுவதும் கஞ்சா தூள் இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இந்த நிலையில் தூரமாக உள்ள ஊர்களுக்கு ஆள் செல்ல முடியாத கிராம பகுதிகளுக்கும் கூட கொரியர் மூலம் கஞ்சா பொட்டலத்தின் மீது வாசனை திரவியங்கள் அடித்து கஞ்சா வாடை அடிக்காதவாறு பிளாஸ்டிக் கவர்களால் நன்கு சுத்தி கஞ்சா இலைகளை பவுடராக்கி பார்சல் செய்து அனுப்பி வைப்பதாகவும், மேலும் உசிலம்பட்டியில் பழைய பாக்கி நேரில் தருவதாக கூறியதால் பல்லடத்தைச் சேர்ந்த வியாபாரி இருசக்கர வாகனத்தில் வந்த போது ஒட்டன்சத்திரம் சாலை தாராபுரம் எரகாம்பட்டி செக்போஸ்டில் மாட்டிக் கொள்வோம் என்பதற்காக மாற்று வழியில் வந்து குண்டடம் செக் போஸ்டில் மாட்டிக்கொண்டதாக குற்றவாளிகள் போலீஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
எனவே தாராபுரம் டிஎஸ்பி தனராஜ் தலைமையில் குண்டடம் போலீசார் குற்றவாளியை மேலும் துருவி துருவி தொடர்ந்து விசாரணை நடத்தியதில் குற்றத்தை ஒப்புக்கொண்ட குற்றவாளிகளை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
No comments:
Post a Comment