திருப்பூரில் கோடை காலத்தில் முன்னிட்டு மக்களின் தாகம் தீர்க்க தண்ணீர் பந்தல் பழ வகைகளுடன் திறந்து வைத்தார் தெற்கு MLA திருப்பூர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பேருந்து நிலையம் முன்பாக, மக்களின் தாகம் தீர்க்கும் விதமாக, கிட்ஸ் கிளப் பள்ளி குழுமம், அன்புடன் திருப்பூர் அறக்கட்டளை & திருப்பூர் செய்தி மக்கள் அமைப்பு ஏற்பாட்டில் கோடைகால நீர் மோர் பந்தலை திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் ஆகிய க செல்வராஜ் MLA அவர்கள் திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர்மோர் & பழ வகைகளை வழங்கினார்.
அதுபோது திருப்பூர் தெற்கு மாநகர திமுக செயலாளர் TKT மு.நாகராசன்,வடக்கு மாநகர செயலாளரும், மாண்புமிகு மேயர் ந. தினேஷ்குமார், துணை மேயர் பாலசுப்பிரமணியம், கிட்ஸ் கிளப் பள்ளி குழும தலைவர் மோகன் கார்த்திக், பகுதி செயலாளர் மு.க.உசேன், மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், வார்டு செயலாளர்கள் முகமது ரபீக், முகமது அலி மேலும் அறக்கட்டளை நிர்வாகிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment