திருப்பூர் மாவட்டம் பல்லடம் பொங்கலூர் அம்பேத்கார் நகர் திருவள்ளுவர் நகர் இட்டிமலை சீனிவாசன் தெரு அயோத்தி தாசர் பண்டிதர் கக்கன் தெரு ராஜி நகர் கலைஞர் தெரு சின்ன வேலாயுதம் பாளையம் இந்திரா நகர் காலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளாக குடியிருக்கும் தலித் மக்கள் உள்ளிட்டோருக்கு தனிநபர் கழிப்பிடம், நியாய விலை கடை தெரு விளக்குகள், நூலகம், விளையாட்டு திடல், உடற்பயிற்சி கூடம், வீட்டுமனை பட்டா, மயான வசதி, சமுதாயக்கூடம், உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய தேவைகளை அடிப்படை உரிமைகளை கேட்டு பலமுறை திருப்பூர் மாவட்ட நிர்வாகத்திடமும் உள்ளாட்சி நிர்வாகத்திடமும் கோரிக்கைகள் வைத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காத காரணத்தாலும் பொங்கலூர் ஒன்றிய அலுவலகம் முன்பு மக்கள் வழிகாட்டி இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் இயக்கத் தலைவர் ராஜகோபால் தலைமை தாங்கினார் மாநில நிர்வாகி சுப்பிரமணி ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் மண்டல ஒருங்கிணைப்பாளர் பொன்னுச்சாமி ஏராளமான மகளிர்கள் உள்ளிட்டோர் கலந்து தங்களது அடிப்படை உரிமைகளை கேட்டு கோஷங்கள் எழுப்பினர், இது பற்றி அந்த பகுதி பொதுமக்கள் கூறியதாவது அதிகாரிகள் எங்களது கோரிக்கை மனுக்களை மறக்கலாம்! மறைக்கலாம்!! ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்தை மறைக்க முடியாது ஊடகங்கள் மூலம் வெளியே வரும் எங்களது வாழ்வாதார உரிமைகள் மீட்டு தரப்படும் ஊடகங்கள் மூலமாக! என்று கூறினார்கள்.
No comments:
Post a Comment