இதுபற்றி அவர் கூறுகையில் தற்போது கோடை காலம் என்பதால் வெப்பம் அதிகமாக உள்ள நிலையில் போக்குவரத்து சீர் செய்யும் பணியில் உள்ள போலீசாருக்கு வெப்பத்தினால் உடல் சோர்வு ஏற்படுகின்ற காரணத்தினால் அவர்களுக்கு காலை மாலை இரு வேளைகளிலும் மோர் மற்றும் பழச்சாறு கொடுக்க தமிழ் நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையொட்டி திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் கோ.சாசாங் சாய் இ.ஆ.ப உத்தரவின் பேரில் பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு சௌமியா அறிவுறுத்தலின் படி போக்குவரத்து போலீசாருக்கு மோர் வழங்கப்படுகிறது தினமும் காலை 10 மணிக்கு மோர் அல்லது பழச்சாறு அதே போல் மாலை 3 மணிக்கு பழச்சாறு அல்லது மோர் வழங்கப்படுகிறது இந்த மோர் வழங்கும் பணி மே மாதம் வெப்பம் தணியும் வரை கொடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இது பற்றி போக்குவரத்து காவல்துறையினர் கூறுகையில் கடும் வெயில் காலத்தை சமாளித்து தங்கள் பணிகளை தொய்வின்றி செய்வதற்கு உதவியாக மோர் மற்றும் பழச்சாறு வழங்க உத்தரவிட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக கூறினார்கள்.
No comments:
Post a Comment