முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூரில் மருத்துவ முகாம், ரத்த தானம், அன்னதானம் வழங்கப்பட்டது. தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமாகிய மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று (26.3.2023) திருப்பூர் 1-வது வட்டக் கழக திமுக, ரேவதி மெடிக்கல் சென்டர் அறக்கட்டளை, தி ஐ பவுண்டேஷன் கண் மருத்துவமனை இணைந்து, மாபெரும் இலவச இருதயம்,பல்,கண் மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
நிகழ்வில் வடக்கு மாவட்ட கழகச் செயலாளரும், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமாகிய க.செல்வராஜ் MLA, வடக்கு மாநகர செயலாளரும், மேயர் ந.தினேஷ்குமார், தெற்கு மாநகர செயலாளரும் தொமுச மாநில துணைச் செயலாளருமான டி. கே. டி .மு.நாகராசன், பகுதி கழகச் செயலாளர்கள் கொ.ராமதாஸ், உசேன், 1வது மண்டல தலைவர் உமாமகேஸ்வரி வெங்கடாசலம் மற்றும் 3 வது மண்டல தலைவர் C.கோவிந்தராஜ், மகளிர் அணி உமாமகேஸ்வரி, கௌரி, திலக் ராஜ், வட்ட கழக செயலாளர் மகேந்திரன், சண்முகம் , மாமன்ற உறுப்பினர் 3வதுவார்டு மாமன்ற உறுப்பினர் லோகநாயகி, 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன், கருப்புசாமி மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
மேலும் இந்த நிகழ்வு க்கு பின் 1000 நபர்களுக்கு அசைவ உணவு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment