உடுமலைப்பேட்டையில் சாலையோர வியாபாரிகள் பயனடையும் வகையில் அடையாள அட்டை சான்று வழங்குதல்!. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 March 2023

உடுமலைப்பேட்டையில் சாலையோர வியாபாரிகள் பயனடையும் வகையில் அடையாள அட்டை சான்று வழங்குதல்!.


திருப்பூர் மாவட்டஉடுமலை சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அனைத்து வியாபாரிகளுக்கும் மத்திய அரசின் திட்டத்தின் கீழ்  பிரதம மந்திரி ஸ்வநிதி   திட்டம் நகராட்சி மூலம்புதிதாக அடையாள அட்டை மற்றும் வியாபார சான்று வழங்கப்பட உள்ளது, மேலும் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள இடங்களில் அமைக்கப்பட்டுள்ள சாலையோர வியாபாரிகளின் கடைகள் அகற்றப்பட்டு அவர்களுக்கு மாற்று இடங்கள்  ஒதுக்கப்பட்டுள்ளன.

சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு மற்றும் விற்பனை ஒழுங்குமுறை விதிகளின் படி வியாபார மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு விதிகளின் படி  மதிப்பின் அடிப்படையில் சதுர அடிகளுக்கான ஆண்டு கட்டணம் மற்றும் குப்பைகள் அகற்றுதல் போன்ற பணிகளுக்கான மாத பராமரிப்பு கட்டணம் நகராட்சி நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

மேலும் போக்குவரத்துக்கு இடையூறாகவும் வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் வியாபார சான்று நகர வியாபார குழுவால் ரத்து செய்யப்பட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உடுமலை நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.


- உடுமலை தமிழக குரல் செய்திகளுக்காக ஜெ வைர பிரகாஷ் 

No comments:

Post a Comment

Post Top Ad