திருப்பூர் மாநகரில் நடைபெறும் குற்றங்களை தடுத்திட இரவு நேரங்களிலும் ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்கும் வசதியை மாநகர போலீசார் ஏற்படுத்தியுள்ளனர் பனியன் தொழிலில் புகழ்பெற்ற நகரம் திருப்பூர் இந்த திருப்பூரில் தொழிலாளிகள் அதிகமாக வசிப்பதால் இவர்களிடம் சமூக விரோதிகள் கஞ்சா விற்பதும், தடைசெய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதும் சட்ட விரோதமாக மது விற்பனையில் ஈடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இது தவிர கொள்ளை சம்பவங்களும் நடைபெற்று வரும் வேளையில் இவற்றை தடுப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மாநகர போலீசார் எடுத்து வருகின்றனர்.
திருப்பூர் மாநகர போலீசார் எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் உள்ள இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகனங்கள் மூலம் இரவு பகலாக 24 மணி நேரமும் ரோந்து பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் இந்த நிலையில் மாநகரம் முழுவதும் அதிநவீன ராட்சத ட்ரோன் கேமரா மூலம் குற்ற சம்பவங்களையும், அதற்குக் காரணமான குற்றவாளிகளையும் கண்டுபிடிக்கவும் முடிவு செய்து இதன் முன்னோட்டமாக காவல்துறை உயர் அதிகாரிகள் முன்னிலையில் மாநகரப் பகுதிகளில் ட்ரேன் கேமராவை விண்ணில் பறக்க வைத்தனர்.
இந்த கேமரா மூலம் கண்காணிக்கும் பொழுது சந்தேகப்படும் நபர்களிடம் விசாரணை நடத்தி குற்றவாளிகளை பிடிக்க முடியும் இதன் மூலம் குற்றங்களை தடுத்திட முடியும் என்பதே காவல்துறையினரின் நோக்கமாகும் .
- தமிழக குரல் மாவட்ட செய்தியாளர் அ.காஜாமைதீன்
No comments:
Post a Comment