திருப்பூரில் கோவில் கிணற்றில் ஆண் சடலம்! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 27 March 2023

திருப்பூரில் கோவில் கிணற்றில் ஆண் சடலம்!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் மைவாடியில், மாரியம்மன் கோவில் பொது கிணற்றில், இறந்த நிலையில் ஆண் சடலம் மிதப்பதாக, உடுமலை தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினருக்கு ஊராட்சி மன்ற தலைவர் முருகன் தகவல் கொடுத்துள்ளார். 

விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், இறந்து மூன்று நாட்கள் ஆன நிலையில், தண்ணீரில் மிதந்த சடலத்தை மீட்டு மடத்துக்குளம் உதவி காவல் ஆய்வாளர் வெங்கடேசன் வசம் ஒப்படைத்தனர். போலீசார் உடலை உடுமலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, விசாரணை மேற்கொண்டதில் இறந்து கிடந்த நபர், அதே பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பதும், குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து குடும்பத்தினர் கொடுத்த புகாரின் பேரில் மடத்துக்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்து இன்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


- தமிழக குரல் செய்திகளுக்காக NA.திருநாவுக்கரசு..B.Sc..,

No comments:

Post a Comment

Post Top Ad