மூலனூர் ஒன்றியம் குமாரபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வடுகபட்டியில் கோவையை சார்ந்த மின் சக்தி நிறுவனமான நற்றினை வென்ச்சர்ஸ் சார்பில் சூரிய சக்தியில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய நிறுவனம் வடுகப்பட்டியில் 110 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அதில் ரூ. 190 கோடி மதிப்பில் 110/ 33 கிலோ வாட்ஸ் புதிய துணை மின் நிலையம் மற்றும் 25 மெகாவாட் சூரிய மின்சக்தி கோவையைச்சார்ந்த மின் சக்தி நிறுவனமான நற்றிணை வென்ச்சர்ஸ் சார்பாக நிறுவப்பட்ட மின் திட்டத்தை தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் திட்டத்தை தொடங்கி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது.
மின் தொடக்க விழாவின் போது கோவை மண்டல மின்சார வாரிய தலைமை பொறியாளர் வினோதன், திருப்பூர் மாநகராட்சி 4ம் மண்டல தலைவரும், தி. மு.க தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன், இந்திய காற்றாலை மின் உற்பத்தி உரிமையாளர்கள் சங்க தலைவர் கஸ்தூரிரங்கன், பல்லடம் மேற்பார்வை பொறியாளர் ஜவகர், தாராபுரம் மின்சார வாரிய கோட்ட பொறியாளர்( பொறுப்பு) எஸ். கார்த்திகேயன், மூலனூர் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் ரத்தினசாமி, மற்றும் பொறியாளர்கள் மின்வாரிய பணியாளர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- தமிழக குரல் செய்திகளுக்காக NA.திருநாவுக்கரசு.
No comments:
Post a Comment