கணியூர் மக்களின் பல்வேறு கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வருவதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் அரசின் கவன ஈர்ப்பு தெருமுனைப் பிரச்சாரம் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கணியூர் பேருந்து நிலையத்தில் நடைபெற்றது.
இப்பிரச்சாரத்தில் V.சௌந்தரராஜன் ஒன்றிய செயலாளர், M. செல்லத்துரை கிளைச் செயலாளர், துணை செயலாளர் T. ரமேஷ், C.சுப்ரமணியன் மாவட்ட நிர்வாகி, K.S.ரணதேவ் மாவட்ட குழு உறுப்பினர், M.ஆறுமுகம் த.கா.உறுப்பினர் மற்றும் V.கணேசன், CPI மேலும் செந்தில்குமார் மாரிமுத்து ராஜசேகர் பொன்னுச்சாமி கருப்பணன் மற்றும் கழக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பிரச்சாரத்தின் போது கீழ் கண்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.
- கணியூர் - காரத்தொழுவு மெயின்ரோட்டில் அண்ணாகுடியிருப்பு பகுதியில் இயங்கி வரும் டாஸ்மார்க் மதுபானக்கடையானது மாணவர் விடுதி மற்றும் காவல் நிலையம் அருகில் அமைந்துள்ளது. டாஸ்மார்க் மதுபானக்கடை பொது மக்களுக்கும். போக்குவரத்துக்கும் இடையூராக உள்ளது ஆகவே மதுபானக்கடையை இடமாற்றம் செய்யக்கோரி.
- காரத்தொழுவு கொமரலிங்கம் மாவட்ட நெடுஞ்சாலையில் கணியூர் ஜோத்தம்பட்டி பகுதிகளில் இருபுறங்களிலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலை விரிவாக்கம் செய்யக்கோரி.
- கணியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய மருத்துவர் இன்றி மக்கள் அவதிப்படுகின்றனர். போதிய சிகிச்கை அளிக்கப்படுவதில்லை இரவு நேரங்களில் வரும் நோயாளிகளை உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பும் நிலையில், 24 மணி நேரமும் செயல்படுகிறது என்று சுகாதார அதிகாரிகள் கூறுவது நியாயம்தானா? இதை சரிசெய்ய வேண்டும். மேலும் போதிய இடவசதி இருந்தும் மருத்துவமனை தரம் உயர்த்த அதிகாரிகள் அலட்சியம் செய்கின்றனர்.பொதுமக்கள் நலன் கருதி தரம் உயர்த்தக்கோரி
- கணியூர் பேருந்து நிலையத்தை மேம்படுத்தி அடிப்படை தேவைகளை செய்யக்கோரி,
- இலவச பேருந்து என்று அரசு அறிவித்தும் பேருந்து உரிய நேரத்திற்கு சரிவர இயக்கப்படுவதில்லை - இதை அரசு முறைப்படுத்தி பஸ் வசதியை ஒழுங்கு செய்யக்கோரி.
- மாலை நேரங்களில் பொது இடங்கள் கோவில் பகுதிகளில் மது பிரியர்கள் மது குடித்து விட்டு மதுபாட்டில்களை உடைத்து விட்டு செல்கின்றனர் பொதுமக்களுக்கு இடையூறு செய்கின்றனர். இதைக் காவல்துறை கண்காணித்து நடவடிக்க எடுக்க வேண்டும்.
- கணியூர் பேரூராட்சி நிர்வாகமே! கணியூர் சுடுகாட்டில் உள்ள முள்செடிகள் புதர்கள் நிறைந்துள்ளது. அதை சுத்தப்படுத்த வேண்டும்.மேலும் சுடுகாட்டில் மின்விளக்குகள் பற்றாக்குறையினால் பொதுமக்கள் சிரமத்திற் உள்ளாகின்றனர்.
இவைகளை சரி செய்யக்கோரியும் இந்த அரசின் கவன ஈர்ப்பு தெருமுனை பிரச்சாரம் சிறப்பாக நடைபெற்றது.
- தமிழக குரல் செய்திகளுக்காக திருநாவுக்கரசு..B.Sc..,
No comments:
Post a Comment