தரமான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என பல சாறு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 March 2023

தரமான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என பல சாறு கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு.

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாகி கொண்டு இருப்பதால் எங்கும் ஜூஸ், குளிர்பானம், பழச்சாறு கடைகள் என திரும்பிய பக்கமெல்லாம் நிறைந்து இருப்பதால் இந்தக் கடைகளில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் தரமானதாக இருக்கிறதா என திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜய லலிதாம்பிகை தலைமையில் அலுவலர்கள் குழுவினர் குளிர்பான கடைகள் பழக்கடைகள் பழச்சாறு ஐஸ் தயாரிப்பு நிறுவனங்களில் சுகாதாரமாக உள்ளதா என்பது குறித்து 12 கடைகளில் ஆய்வு செய்தனர்.

கோடை காலத்தில் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜய லலிதாம்பிகை கூறியதாவது குளிர்பானம் தயாரித்து விற்பனை செய்பவர்கள் தாங்கள் உபயோகப்படுத்தும் ஐஸ் கட்டி தரமானதாக இருக்க வேண்டும் அதிக வண்ணங்களை குளிர்பானத்தில் சேர்க்கக்கூடாது, குளிர்பானம் தயாரிக்கும் இடம் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும், பழச்சாறு தயாரித்து விற்பனை செய்பவர்கள் தரமான பழங்களை பயன்படுத்தியே பழச்சாறு தயாரிக்க வேண்டும் மற்றும் அதற்கு தேவையான தண்ணீர், பால் போன்றவை தரமானதாக இருக்க வேண்டும்.


பொதுமக்கள் குளிர்பானங்கள் மலிவான விலையில் அதிக வண்ணங்களில் இருந்தால் அவற்றை உண்ணக்கூடாது குளிர்பான பாட்டில்கள் உரிய லேபிள் விவரங்கள் தயாரிப்பு காலாவதி தேதி அறிந்து பயன்படுத்த வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார் கோடை காலம் முழுவதும் இதுபோன்ற திடீர் ஆய்வுகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்படும் விதிகளை மீறும் உணவு வணிகர்கள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் உணவு தொடர்பான புகார்களை 9444042322 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் புகார் செய்யலாம் என்று உணவு பாதுகாப்புத் துறையினர் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad