திருப்பூர் மாவட்டம் உடுமலை பேட்டையில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் தேர் திருவிழா இன்று நோன்பு சாட்டுத்துடன் தொடங்குகிறது ஏப்ரல் 13ஆம் தேதி வரை வான வேடிக்கை மற்றும் தேர் திருவிழா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் பொருட்காட்சிகள் ஆடல் பாடல் பாட்டு கச்சேரிகள் நடைபெற உள்ளது . ஆகையால் நகராட்சிக்கு சொந்தமான 91 சென்ட் நிலம் ஏலத்துக்கு விடப்பட்டது ஏலத் தொகையாக மூன்றில் ஒரு பங்கு முன் தொகையாக வைக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டில் குறைந்தபட்ச ஏலத் தொகையாக ரூபாய் 58 லட்சம் அரசு நிர்ணயம் செய்த நிலையில் தொகை அதிகமாக இருப்பதாக கடும் எதிர்ப்பு தெரிவித்து பலமுறை ஏலங்கள் ஒத்திவைக்கப்பட்டது பின்னர் 42 லட்சம் அளவிலேயே ஏலம் கூறப்பட்டது ஆகையால் நடப்பு ஆண்டில் 23 லட்சம் கூடுதல் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு குட்டை திடலில் ஏலம் ரூபாய் 65 1/4லட்சத்துக்கு ஏலம் போனது இதனால் பொழுதுபோக்கு கட்டணங்கள் பல விதமாக கூட வாய்ப்புகள் உள்ளது கட்டணங்கள் கூடாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- தமிழக குரல் செய்திகளுக்காக ஜெ. வைர பிரகாஷ்
No comments:
Post a Comment