திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சிக்கு உட்பட்ட அவிநாசி ரோடு கோபால் மில் பஸ் ஸ்டாப்பில் நல்ல தண்ணீர் குழாய் உடைந்து தினமும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாக சாக்கடையில் கலக்கிறது, மேலும் இரும்பு தடுப்பான் பிரதான சாலையின் நடுவில் வைக்கப்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகளின் கவனம் சிறிது தவறினாலும் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும் திருமுருகன் பூண்டி அதிகாரிகள் நகர மன்ற உறுப்பினர்கள் இந்த சாலை வழியாக வந்து போக உள்ளனர் இருந்தாலும் இதை சரி செய்ய உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் தெரிவித்தனர், மேலும் இது கோடை காலம் என்பதால் தினமும் பல லட்சம் லிட்டர் தண்ணீர் சாக்கடையில் கலப்பது மிகவும் வேதனையாக உள்ளது திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக சம்பந்தப்பட்ட துறைக்கு உடனே சரி செய்ய உத்தரவிட வேண்டும் என்பதே பொதுமக்கள் கோரிக்கையாகும்.
- தமிழக குரல் மாவட்ட செய்தியாளர் அ. காஜாமைதீன்
No comments:
Post a Comment