நாளுக்கு நாள் விலைவாசி உயருது ஆனால் கூலியோ குறையுது பாத்திர தொழிலாளர்கள் நிலமை பரிதாபம்! - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 30 March 2023

நாளுக்கு நாள் விலைவாசி உயருது ஆனால் கூலியோ குறையுது பாத்திர தொழிலாளர்கள் நிலமை பரிதாபம்!


திருப்பூரில் பாத்திர தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு ஆர்ப்பாட்டம்  கடந்த 100 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பூர் அனுப்பர்பாளையத்தில் பித்தளை பாத்திரங்கள் தொழிலாளர்கள் கைத்திறமையால் உருவாக்கப்படுகிறது இதனால் தமிழகம் மட்டுமல்ல வெளி மாநிலங்களுக்கும் இங்கிருந்து வியாபாரிகள் அனுப்புகிறார்கள்.


கூலிக்கு பித்தளை பாத்திரங்களை கைகளால் அடித்து அடித்து உருவம் கொடுக்கும் தொழிலாளர்கள் கைகளில் காப்பு காய்த்தது தான் மிச்சம் வருடா வருடம் விலைவாசி உயர்வால் தங்கள் வாழ்வாதாரத்தையும் தங்கள் குழந்தைகளின் வாழ்வாதாரத்தையும் உயர்த்திக்கொள்ள முடியாமல் வாடகை வீட்டில் குடியிருக்கும் அவலம் தான் உள்ளது, இவர்களால் உற்பத்தி செய்யும் பாத்திரங்கள் பளபளக்கும் ஆனால் வாழ்க்கையோ இருளடைந்து கிடக்கிறது.


உற்பத்தியாளர்களே உயரும் நிலை உள்ளது இந்த நிலையில் பாத்திர தொழிலாளர்களின் கூலி உயர்வு சம்பந்தமாக பாத்திர தொழிலாளர்ளின் அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி பாத்திர உற்பத்தி யாளர்கள் சங்கத்துடன்  பதினாறுக்கும் மேற்பட்ட முறையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது, அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி சார்பாக எவர்சில்வர் பாத்திரத்திற்கு 21% சதவீதமாகவும் பித்தளை பாத்திரத்திற்கு 30% சதவீதமாகவும் கூலி கேட்ட நிலையில் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் எவர்சில்வர் பாத்திரத்திற்கு 10% சதவீதமும், பித்தளை பாத்திரத்திற்கு 15% சதவீதமும் கூலி வழங்கப்படடும் என்று கூறிய நிலையில் நேற்று வரை அதிகாரிகள் முன்னிலையில் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த ஒரு முன்னேற்றமும் ஏற்படாத நிலையில் இன்று திருப்பூர் அனுப்பர்பாளையம் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கத்தின் முன்பாக அனைத்து தொழிற்சங்க கூட்டு கமிட்டி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இதில்  தொழிலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்கத்தின் பிடிவாத போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது மேலும் தொழிலாளர்களின் நியாயமான கூலி உயர்வு கோரிக்கைகளை நிராகரிக்கும் பாத்திர உற்பத்தியாளர்கள்  சங்கத்தின்  பிடிவாத போக்கால் தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்யும் நிலைமைக்கு தள்ளப்படுகிறது என்பதே நிதர்சனமான உண்மை.


- திருப்பூர் மாவட்ட செய்தியாளர் அ.காஜா மைதீன்.

No comments:

Post a Comment

Post Top Ad