தாராபுரம் மதுவிலக்கு போலீசார் இரகாம்பட்டி சோதனை சாவடியில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் ஆய்வாளர் கோவர்தனாம்பிகை, உதவி ஆய்வாளர் கார்த்தி தங்கம்,சிறப்பு உதவி ஆய்வாளர்கள் சந்திரமௌலி, மணிமுத்து, தலைமை காவலர்கள் மதியழகன் செந்தில் குமார் ஆகியோர் வாகனச் சோதனை மேற்கொண்டார். அப்போது சேலத்தில் இருந்து ஒட்டன்சத்திரம் நோக்கி சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது காரை ஓட்டி வந்த வாலிபர் முன்னுக்கு பின்னாக பதில் அளித்தார். இதனை தொடர்ந்து காரின் பின்பகுதி திறந்து பார்த்தபோது வாலிபர் காரில் மறைத்து வைத்திருந்த நான்கு பைகளை சந்தேகத்தின் பெயரில் சோதனை செய்தனர் அதில் 22 பண்டல்களில் சுமார் 45 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் சேலம் மாவட்டம் முத்தனம் பட்டி பகுதியில் சேர்ந்த சேகர் மகன் தமிழ்ச்செல்வன் வயது (25) என்பது தெரிய வந்தது. மேலும் அவர் லாரி டிரைவராக பணியாற்றி வருவதால் ஆந்திராவுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.
இந்த நிலையில் ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி லாரியின் மூலம் சேலத்துக்கு கடத்தி வந்து அங்கு அவரின் தந்தை சேகர் இடத்தில் கொடுத்து மறைத்து வைத்து அதன் பிறகு மொத்தமாக கோவை ஈரோடு திருப்பூர் திண்டுக்கல் நாமக்கல் சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு மொத்தமாக விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. தற்போது தமிழ்ச்செல்வன் தந்தை சேகர் அவருடைய நண்பர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் 45 கிலோ கஞ்சா கேட்டதை தொடர்ந்து விற்பனை செய்வதற்காக கொண்டு செல்லும் வழியில் போலீசாரிடம் மாட்டிக் கொண்டார்.
இதனை தொடர்ந்து தமிழ்ச்செல்வன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை சிறையில் அடைத்தனர். மேலும் கஞ்சா கடத்தலுக்கு உடந்தையாக இருந்த தமிழ்ச்செல்வனின் தந்தை சேகர் மற்றும் அவரது நண்பர் ஆகியோரை போலீசார் கைது செய்ய நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
No comments:
Post a Comment