தாராபுரம் அரசு பஸ் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 18 April 2023

தாராபுரம் அரசு பஸ் மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து.


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் பொன்னமராவதியில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி செல்லும் பஸ் ஒன்று தாராபுரம் புதிய பேருந்து நிலையத்திற்கு காலை வந்தது அப்பொழுது அரசு பஸ் பேருந்து நிலையம் நுழைந்து கொண்டிருந்தபோது அதே பேருந்து நிலையம் முன்பு ஒரு கண்டெய்னர் ஈச்சர் வேன் அதிவேகமாக வந்து கொண்டிருக்கிறது. திடீரென எதிர்பாராத விதமாக ஈச்சர் வேன் அரசு பஸ்ஸின் பக்கவாட்டில் மோதியது பஸ்ஸில் பயணம் செய்து கொண்டிருந்தவர்கள் என்ன நடந்தது என தெரியாமல் சத்தம் போட்டனர். 

அரசு பஸ்சை ஓட்டி வந்த ஓட்டுநர் தனது சாமர்த்தியத்தால் பஸ்ஸை பிரேக் அடித்து தனது கட்டுக்குள் கொண்டு வந்தார். அதே நேரத்தில் ஈச்சர் கண்டைனர் வேன் அரசு பஸ் மற்றும் டயர்களுக்கு நடுவே மாட்டிக்கொண்டது எனவே அங்கிருந்து கடைக்காரர்கள் பஸ்ஸில் பயணம் சென்றவர்கள் இறக்கி ஈச்சர் வாகனத்தில் மாட்டிக்கொண்ட கணேசன், பவுன் ரிச்சர்ட், மணிகண்டன், மதன்குமார், ஆகிய நான்கு பேரையும் ஈச்சர் வாகனத்தை உடைத்து நான்கு பேரையும் வெளியே மீட்டெடுத்து ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.


அங்கு அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அரசு பஸ்ஸில் பயணம் செய்த ஒருவருக்கு லேசான காயங்கள் ஏற்ப்பட்டது அவரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அரசு பஸ் மீது ஈச்சர் கண்டெய்னர் மோதிய விபத்தால் தாராபுரம் பேருந்து நிலையத்தில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட அரசு ஓட்டுநர் நடத்துனர் இடத்திலும் மற்றும் ஈச்சர் வாகன ஓட்டுநர் இடத்திலும் தாராபுரம் போலிசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad