திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம், ஜாக்டோ ஜியோ சங்கத்தைச் சேர்ந்த சத்துணவு ஊழியர்கள் தரையில் அமர்ந்து கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார் மாவட்ட செயலாளர் முருகேசன் கோரிக்கை விளக்க உரை ஆற்றினார் ஆர்ப்பாட்டத்தில் காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் மற்றும் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும் ஓய்வுஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முழக்கங்கள் எழுப்பப்பட்டது.
மேலும் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் மாவட்ட தலைவர் ராணி ஜாக்டோ ஜியோ மாவட்ட அமைப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் இறுதியில் பொருளாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார் இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment