உரிமை கோரப்படாத வாகனங்கள் தாராபுரம் காவல் நிலையத்தில் ஏலம். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 1 April 2023

உரிமை கோரப்படாத வாகனங்கள் தாராபுரம் காவல் நிலையத்தில் ஏலம்.


திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் தாராபுரம் மூலனூர் அலங்கியம் மற்றும் குண்டடம் காவல் நிலையங்களில்  பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நாளது வரை எவராலும் உரிமை கோரப்படாத பல்வேறு வழக்குகளில் சம்பந்தப்பட்ட இரண்டு/நான்கு சக்கர வாகனங்களை பொது ஏலம் விடுதல் தொடர்பாக திருப்பூர் மாவட்ட அரசிதழில் (எண் 2,நாள்:27.02.2022) பிரசுரம் செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தாராபுரம் வட்ட நிர்வாக நடுவர் மற்றும் வட்டாட்சியர் அவர்களால் எதிர்வரும் 5/4/2023 அன்று காலை 10:30 மணிக்கு பொது ஏலம் தாராபுரம் காவல் நிலையத்தில் நடைபெறும். வாகனங்களை பார்வையிட விரும்புபவர்கள் ஏலம் நடைபெறும் நாளோ அல்லது ஏலம் நடைபெறும் முந்தைய நாளோ காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாகனங்களை பார்வையிடலாம்.

பொது ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் 5 /4/ 2023 அன்று காலை 10 மணிக்கு முன் வைப்புத் தொகை ரூ.5000 ரொக்கமாக செலுத்தி ரசீது பெற்று ரசித்துடன் பொது ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஆதார் அடையாள அட்டையுடன் முன்வைப்பு தொகை செலுத்தி உள்ள நபர்கள் மட்டுமே பொதுஏலத்தில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். 


வாகனத்தை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை அதற்குண்டான சரக்கு மற்றும் சேவைவரி (18%) முழுவதையும் ஏலம் விடும் இடத்தில் செலுத்தி அப்போதே வாகனத்தை அவர்களது பொறுப்பில் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு தாராபுரம் மூலனூர் அலங்கியம் மற்றும் குண்டடம் காவல் நிலையங்களை நேரடியாகவோ அல்லது தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம். என வட்ட நிர்வாக நடுவர் மற்றும் வட்டாட்சியர் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad