தேரோடும் வீதிகளில் இருபுறமும் மற்றும் மாடி கட்டிடங்களில் காத்திருந்து அலங்கரிக்கப்பட்ட தேர் அசைந்தாடி வரும் பொழுது மலர்களை தூவி வரவேற்பு கொடுப்பார்கள் தற்போது அருள்மிகு மாரியம்மனுக்கு நோம்பு சாட்டி தேரோட்டம் நடக்க இருக்கும் நிலையில் முஸ்லிம்கள் தலைமுறை தலைமுறையாக அம்மனுக்கு சீர்வரிசை செய்யும் நிகழ்வு இந்த ஆண்டும் தொடர்ந்தது உடுமலை பூர்வீக பள்ளிவாசல் ஜமாத்தை சேர்ந்த முஸ்லிம்கள் உடுமலை நகர மன்ற தலைவர் மத்தீன் தலைமையில் அருள்மிகு மாரியம்மனுக்கு சார்த்த பட்டுப் புடவை மற்றும் பழங்கள் உள்ளிட்ட சீர் தட்டுகளுடன் பள்ளிவாசலில் இருந்து ஊர்வலமாக அருள்மிகு மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு வந்தனர்.
அவர்களை மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஸ்ரீதர் மற்றும் நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வரவேற்று உபசரித்து ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்தனர் சீர்வரிசையை நிர்வாகிகளிடம் கொடுத்த முஸ்லிம்கள் தேர் திருவிழா சிறப்பாக நடைபெற வாழ்த்துக்களை தெரிவித்தனர் பன்னெடுங்காலமாக தொடரும் இந்த மத நல்லிணக்க நிகழ்ச்சி இன்னும் பல தலைமுறைகள் தாண்டி தொடர வேண்டும் என்று பொதுமக்கள் மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.
No comments:
Post a Comment