திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நகர் பகுதி முழுவதும் சென்று கொண்டுள்ள ராஜ வாய்க்காலை தூர்வார வேண்டும்.என சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ராஜவாய்க்காலில் வரும் தண்ணீர் பாசனத்திற்கு பயன்பட்டு வருகிறது.
பாசனத்திற்காக வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டவுடன் தாராபுரம் நகர் முழுவதும் இருந்து வரும் கழிவு நீர் அனைத்தும் ராஜவாய்க்காலில் விடப்படுகிறது இதனால் ராஜவாய்க்கால் சாக்கடை நீராக மாறி உள்ளது. இதனால் விவசாயி பணிகள் செய்ய முடியாமல் விவசாயிகள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே ராஜவாக்காலை தூர்வார வேண்டுமென விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment