திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தெற்கு மாவட்ட நகர பாஜக வினர் சார்பில் டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெற்றது இதற்கு நகர தலைவர் விநாயக சதீஷ் தலைமை தாங்கினார், அம்பேத்கர் நடைபயண பேரணி காமராஜபுரத்தில் துவங்கி சின்னக்கடைவீதி பெரியகடைவீதி பூக்கடை கார்னர் வழியாக அண்ணா சிலை அருகே வந்தடைந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அம்பேத்கர் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்வில் மாநில செய்தி தொடர்பாளர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.கே.கார்வேந்தன் மாவட்ட துணைத்தலைவர்கள் ராஜா(எ) கோவிந்தசாமி ஜெயக்குமார் பெரியசாமி மாநில பொது குழு உறுப்பினர் ராஜு நகர பொதுச்செயலாளர் செல்வம் மாநில மாவட்டம் நகர நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். டிஎஸ்பி தனராசு தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
No comments:
Post a Comment