தாராபுரத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீத்தொண்டு நாள் விழா அனுசரிப்பு. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 April 2023

தாராபுரத்தில் தீயணைப்புத்துறை சார்பில் தீத்தொண்டு நாள் விழா அனுசரிப்பு.


திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் விழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக தாராபுரம் பஸ் நிலையத்தில் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் தீயணைப்பு துறையினர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை அடுப்பின் அருகில் வைக்க கூடாது. படுக்கையில் புகை பிடிக்கக் கூடாது. 

மேலும் தீ விபத்து ஏற்பட்ட இடத்தில் மின்சாரத்தை உடனடியாக துண்டிக்க வேண்டும் உள்ளிட்ட தீ விபத்தினை தவிர்க்க கூடிய வழிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அதைத்தொடர்ந்து துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கினர். 

No comments:

Post a Comment

Post Top Ad