திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் நகரம் 17வது வார்டு சார்பில் புனித ரமலான் மாதத்தின் இப்தார் என்னும் நோன்பு திறப்பு நிகழ்வு தாராபுரம் மாரியம்மன் கோயில் அருகில் உள்ள SS திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொதுமக்களுக்கு நோன்பு கஞ்சிகள் மற்றும் பழவகைகள் வழங்கி நோன்பு திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ்நாடு செய்தி மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர், திருப்பூர் மாநகராட்சி 4வது மண்டலத் தலைவர் இல. பத்மநாபன், தாராபுரம் நகர செயலாளர் S.முருகானந்தம், தாராபுரம் ஒன்றிய செயலாளர் மற்றும் ஒன்றியக் குழுப் பெருந் தலைவர் SV செந்தில்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், நகர்மன்ற தலைவர் பாப்புகண்ணன், நகர துணை செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் மாவட்ட, நகர ஒன்றிய பேரூர் நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments:
Post a Comment