மேலும் ஸ்ரீரங்கன் கூலி வேலைக்கு போய் வருகிறார் மகன்கள் இருவரும் கூலி தொழிலாளர்கள் இவர்களுக்கு சொந்தமாக மூன்று வீடுகள் உள்ளது இதில் இரண்டு வீடுகளில் மேற்கூரை ஆஸ்பெட்டாஸ் சீட்டால் ஆனது ஒரு வீடு தென்னங்கீற்றால் மேயப் பட்டுள்ளது இந்த நிலையில் ஸ்ரீரங்கன் குடும்பத்தினர் அனைவரும் நேற்று வேலைக்கு சென்று விட்டனர் மதியம் 2 மணிக்கு ஹாஸ்பிட்டாஸ் போடப்பட்ட வீட்டின் உள்ளே ஒரு பகுதியில் திடீர் என தீப்பிடித்து எறிய தொடங்கியது.
இந்த தீ மழமழவென்று பக்கத்தில் உள்ள இரண்டு வீடுகளுக்கும் பரவியது இதை பார்த்த பொதுமக்கள் தண்ணீரை கொண்டு வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர் ஆனால் அவர்களால் தீயை அணைக்க முடியவில்லை அப்போது வீட்டிலிருந்த சமையல் சிலிண்டர்களில் ஒன்று வெடித்து சிதறியது இதில் கேஸ் சிலிண்டர் உடைந்ததில் ஒரு பகுதி அருகில் வீட்டிலிருந்த குமரனின் மனைவி விரால் (85) மீது விழுந்தது இதில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது உடனே அவரை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இது பற்றி தகவல் அறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் வேலுச்சாமி (வெள்ளகோயில்) மணிகண்டன் (காங்கேயம்) தலைமை தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர் இந்த தீ விபத்தில் வீட்டிலிருந்த டீவி பாத்திரங்கள் துணிகள் உள்ளிட்ட பொருள்கள் சாம்பலானது இது பற்றிய புகாரின் பேரில் காங்கேயம் காவல்துறை தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் மேலும் இந்த தீ விபத்தில் எரிந்த பொருட்களின் சேதம் மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது.
No comments:
Post a Comment