கொசவம்பாளையத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் தையல் தொழிலாளி இவர் வீட்டுக்கு மின் இணைப்புக்கு கோரி பல்லடம் மின் வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். மின்வாரிய அதிகாரிகள் தடையில்லா சான்று கேட்டிருந்தனர். இந்நிலையில் அவரது வீட்டுக்கு மின்வாரிய ஊழியர் போல வந்த ஒருவர் மின்மீட்டர் ஒன்றை பொருத்தி விட்டு ரூபாய் 6000 செலுத்துமாறு கூறியுள்ளார். மின்வாரியத்தின் கணக்கெடுக்கும் அட்டையை அந்த நபர் வழங்கியதோடு ரசீதை அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றுவிட்டார். அலுவலகத்தில் மணிகண்டன் சென்று ரசீதை கேட்டுள்ளார் மின் அதிகாரிகள் விளக்கம் அளித்த பின்னரே தான் ஏமாற்றப்பட்டது மணிகண்டன் உணர்ந்தார். இது தொடர்பாக பல்லடம் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்தார் அவிநாசி தாராபுரத்தில் இதேபோல மோசடி நடைபெற்றுள்ளதாக காவல் நிலையத்திற்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தாராபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் பாலன் கூறியதாவது மின்வாரியத்தில் பணியில் இல்லாத நபர்கள் தன்னை மின்வாரிய அலுவலர் எனக்கூறி மின் இணைப்பு பெற வேண்டி விண்ணப்பித்து நிலுவையில் உள்ள விண்ணப்பாதாரர்களிடம் மின்மீட்டர் அளவி ஒதுக்கப்பட்டதாக நேரில் தெரிவித்து மோசடி செய்லில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற மோசடி நபர்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் தாராபுரம் கோட்டத்தில் உள்ள அனைத்து அனைத்து மின் நுகர்வோரும் தங்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகளில் பொருத்தப்பட்ட மின் மீட்டர்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். மின் மீட்டர் பொருத்தி தருவதாக சந்தேகப்படும்படி யாரேனும் வந்தால் தாராபுரம் செயற்பொறியாளர் அவர்களுக்கு 9445851562 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என்று தெரிவித்தனர்.
No comments:
Post a Comment