தாராபுரம் புதிய பேருந்து நிலையத்தில் செயல்படக்கூடிய கடைகள் பயணிகளின் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரமற்ற முறையில் ஈ மொய்த்த பழங்கள் திண்பண்டங்கள் விற்பனை செய்யப்படுவதாகவும். பயணிகள் நிற்க்கும் நடைபாதையில் இருசக்கர வாகனங்களை நிறுத்தி வைத்து கடைக்காரர்களுக்கு ஆக்கிரமித்து வருவதாகவும் நகராட்சி நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தன. புகாரைத் தொடர்ந்து இன்று நகராட்சி ஆணையாளர் ராமர் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த கடைகளை அகற்றும் வேலையில் ஈடுபட்டனர்.
அப்போது பேருந்து நிலையத்தில் பேக்கரி மற்றும் வியாபாரம் நடத்தி வரும் நபர்கள் பேருந்து நடைபாதையை தடுத்து பயணிகளுக்கு இடையூறாக தனது இருசக்கர வாகனங்களையும் மற்றும் பேக்கரிக்கு பயன்படுத்தும் அண்டா மற்றும் பேக்கரி பொருட்களும் நடைபாதையில் வைத்து ஆக்கிரமிப்பு செய்து வந்தனர். இந்நிலையில் தாராபுரத்தில் கடும் வெயில் தாக்கம் உள்ளதால் பொள்ளாச்சி ஈரோடு கோவை மற்றும் நகர் கிராமபுறங்களுக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்தில் பயணிகள் இறங்கி நிழலுக்கு நிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் அவர்கள் கடைக்கு முன் வைத்திருந்த பொருட்களை அதிரடியாக நகராட்சி ஊழியர்கள் வாகனத்தில் ஏற்றி சென்றனர். இதனால் கடை உரிமையாளருக்கும் நகராட்சி ஆணையாளருக்கும் பெரும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் பேருந்து நிலையத்தில் அரை மணி நேரத்துக்கு மேலாக பரபரப்பாக காணப்பட்டது இதனைத் தொடர்ந்து பேருந்து நிலையத்தில் மீண்டும் ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டால் கடையின் உரிமம் ரத்து செய்யப்படும் மேலும் கடைகளுக்கு அபராதம் மிதிக்கப்படும் என நகராட்சி ஆணையாளர் எச்சரிக்கை விடுத்து சென்றுள்ளார்.
No comments:
Post a Comment