திருப்பூர் மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் வருடம் தோறும் சமூக நல்லிணக்க ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியும் மேலும் பொங்கல் விழாவில் மும்மதத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொள்ளும் சமத்துவ பொங்கல் நிகழ்ச்சியும் வருடம் தோறும் திருப்பூர் மாநகர் மாவட்ட மதிமுக சார்பில் மாவட்ட செயலாளர் ஆர் நாகராஜன் MC தலைமையில் நடைபெறும் அந்த வகையில் இந்த வருடம் திருப்பூர் காந்திநகர் இபி காலனியில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் சமூக நல்லிணக்க ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மதிமுக மாநகர் மாவட்ட செயலாளர் ஆர் நாகராஜன் MC தலைமையில் நடைபெற்றது.
மாநகர இளைஞரணி துணைச் செயலாளர் நாசர் அலி முன்னிலை வகித்தார் மாவட்ட பிரதிநிதி முகம்மது சைபுதீன் வரவேற்றார் மாநகர் மாவட்ட அவை தலைவர் நேமிநாதன், பொருளாளர் நல்லூர் மணி, மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் சாந்தாமணி, 20 வது வார்டு கவுன்சிலர் குமார், மங்கலம் பகுதி மதிமுக நிர்வாகிகள் பாபு சேட் பஷீர் அகமது 28 வது வார்டு பிரதிநிதி அக்பர் அலி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள், இதில் ஜிகே கார்டன் பள்ளி தலைமை இமாம் ஹாஜி மவுலவி முகமது அப்துல் கனி பிரார்த்தனை செய்து நோன்பு திறக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சாமுண்டிபுரம் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் சுன்னத் வல் ஜமா அத் பள்ளி வாசலின் தலைவர் நாசர், பொருளாளர் முகமது இஸ்மாயில், செயலாளர் ஹிதயத்துல்லா, முத்த வல்லி ஜமாலுதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் முன்னதாக சமூக ஒற்றுமை வேண்டியும் நாட்டு மக்கள் நலமுடன் வாழவும் சிறப்பு பிரார்த்தனை செய்யப்பட்டது, மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மும்மதத்தினரும் சமூக நல்லிணக்கத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
முடிவில் மாநகர் மாவட்ட செயலாளர் ஆர்.நாகராஜ் MC ஏற்பாட்டின்படி நல திட்ட உதவிகள் வழங்கப்பட்டது, இதில் மதிமுக பகுதி செயலாளர்கள் குமாரவேல், திருநாவுக்கரசு, ஆனந்தகுமார், தளபதி பிரபு, செந்தில் குமார், நல்லூர் ராஜு, மாநகர துணை செயலாளர் பூபதி உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment