திருப்பூரில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்ப்பது குறித்து பிரச்சார வாகனத்தை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் துவக்கி வைத்தார், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களின் உத்தரவின் பேரில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி உள்ளிட்ட பல்வேறு சலுகை திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் வேளையில் மேலும் தமிழ்நாடு முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்ப்பது குறித்து தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டத்தில் பெற்றோர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment