இந்நிலையில் அவசர பிரிவு வார்டில் தரையில் பதிக்கப்பட்ட டைல்ஸ் திடீரென என வெடித்து விரிசல் விட்டது. அவசர பிரிவில் 36 நோயாளி சிகிச்சை பெற்று வந்தனர். அப்போது டைல்ஸ் வெடித்ததில் பூகம்பம் ஏற்பட்டு விட்டதோ என நோயாளிகள் அச்சமடைந்தனர். மேலும் அவசர பிரிவு முன் நுழைவாயிலில் நோயாளி நின்று கொண்டிருந்தனர் ஆனால் யாருக்கும் எந்த வித பாதிப்பும் இல்லை. இந்த நிலையில் உடைந்த டைல்ஸ்களை மருத்துவமனை ஊழியர்கள் அப்புறப்படுத்தி வைத்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில் டைல்ஸ் உடைந்தது குறித்து பொதுமக்கள் ஒருவர் தெரிவிக்கையில் ஒப்பந்ததாரர்கள் அதிக லாபம் சம்பாதிக்கும் வகையில் தரம் குறைவான டைல்ஸ்களை மருத்துவமனையில் தரைத்தளத்தில் பதித்து உள்ளனர் ஆயிரக்கணக்கான நோயாளிகள் அவசர சிகிச்சைக்காக வந்து செல்லும் இடத்திலேயே இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது நோயாளிகள் மற்றும் பொதுமக்களை வெகுவாக பாதித்துள்ளது எனவே இனியாவது தரமான பொருட்களைக் கொண்டு கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
அரசு மருத்துவமனையில் டைல்ஸ் உடைந்த சம்பவம் தாராபுரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
No comments:
Post a Comment