இஸ்லாமியர்கள் ரமலான் மாதத்தில் நோன்பு வைப்பது கடமையாக்கப்பட்ட நிலையில் இந்த நோன்பு காலத்தில் பல்வேறு மதத்தைச் சேர்ந்த அரசியல்வாதிகள் சமூக ஆர்வலர்கள் மற்றும் சமுதாய நல்லிணக்க பெரியவர்கள் கலந்து கொள்ளும் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் திருப்பூரில் மாவட்ட மாநகர காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு துறை சார்பில் நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் வடக்கு மாநகர திமுக செயலாளரும், மேயருமான ந.தினேஷ் குமார், திருப்பூர் மாநகர் மாவட்ட தேசிய காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணன், தொமுச மாநில துணைச் செயலாளரும், தெற்கு மாநகர திமுக செயலாளருமான டி கே டி மு.நாகராசன், துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம், திமுகவின் பகுதி செயலாளர்கள் மியாமி அய்யப்பன், உசேன், 2ஆம் மண்டல தலைவர் தம்பி கோவிந்தராஜ், வட்ட செயலாளர்கள் ஆனந்தன், நித்யானந்தம், கோமகன், மாமன்ற உறுப்பினர்கள் சாந்தாமணி, விஜயலட்சுமி கோபால்சாமி, தம்மன்ராஜ், ஓதியப்பன், இஸ்லாமிய சகோதரர்களும் மற்றும் திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment