காதல் தோல்வியால் இளைஞர் தூக்கு மாட்டி தற்கொலை. - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 3 April 2023

காதல் தோல்வியால் இளைஞர் தூக்கு மாட்டி தற்கொலை.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் காதல் விரக்தியால் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பம் குறித்து தாராபுரம் போலீசார் கூறப்படுவதாவது.

தாராபுரம் அடுத்த நஞ்சையம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குப்புச்சிபாளையத்தை சேர்ந்த சௌந்தரராஜன் மகன் ஆனஸ்ட்ராஜ் வயது 28 இவர் தனியார் நிறுவனத்தின் வேலை செய்து வருகிறார். இவர் அதே பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வந்தார். இந்நிலையில் இரவு வீட்டுக்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.


அங்கேயே தங்கியிருந்த ஆனஸ்ட்ராஜ் தூக்கு மாட்டி இறந்த நிலையில் இருந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் ஆனஸ்ட்ராஜ் வீடு திறந்து கிடந்ததை பார்த்து அப்போது உள்ளே சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் தாராபுரம் காவல் நிலையத்திற்கு  தகவல் தெரிவித்தனர். போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை கூடத்தில் அனுப்பி வைத்தனர். 


இறந்து போன ஆனஸ்ட்ராஜ் ஒரு பெண்ணுடன் பழகி வந்ததாகவும் அதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு இருக்கலாம் அதில் விரக்தி அடைந்த ஆனஸ்ட்ராஜ் தற்கொலை செய்து இருக்கலாம் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இச் சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

No comments:

Post a Comment

Post Top Ad