தாராபுரத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - திருப்பூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 April 2023

தாராபுரத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.


திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் காலை சிற்றுண்டியை சத்துணவு திட்டத்துடன் இணைக்க வேண்டும் என்று பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு முதல்வரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய துணைத் தலைவர் கே.ரத்தினம் தலைமை வைத்தல் ஒன்றிய செயலாளர் என்.பத்மா மாவட்ட இணை செயலாளர் ஜெயந்தி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். 



ஆர்ப்பாட்டத்தின் போது முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைந்து சத்துணவு மையங்கள் மூலமாக சத்துணவு ஊழியர்களை கொண்டு அமல்படுத்தப்பட வேண்டும் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு பணிக்கொடையாக அமைப்பாளர்களுக்கு ரூபாய் 5 லட்சமாகவும் சமையல் உதவியாளர்களுக்கு ரூபாய் 3 லட்சமாகவும் உயர்த்தி வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்புடன் கூடிய குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 9அயிரம் வழங்க வேண்டும். 


சிறப்பு காலம் வரை ஊதியத்தை நீக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க வட்ட கிளைத்தலைவர் கே.செந்தில்குமார் நிர்வாகி மணிமொழி மற்றும் சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகிகள் சந்திரலேகா, சுஜாதா செல்வம் புஷ்பா, ஆனந்தி, வசந்தாமணி உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர், முடிவில் ஒன்றிய பொருளாளர் மாரியம்மாள் நன்றி தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Top Ad