இந்த விழாவில் பாடல்கள் கவியரங்கம் பரதநாட்டியம் பறை இசை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது விழாவில் திருப்பூர் மாவட்ட அளவிலான கலைத்திருவிழாவில் முதலிடம் பெற்ற ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி டி எஸ் யாழினி, ஓவியர் எம் அருண்குமார் ஆகியோருக்கு சிறப்பு பரிசுகளை திருப்பூர் மாநகராட்சி பத்தாவது வார்டு திமுக மாமன்ற உறுப்பினர் பிரேமலதா, கோட்டா பாலு ஆகியோர் வழங்கினார்கள் இந்த நிகழ்வில் குப்பையின் கதை என்ற தலைப்பில் துப்புரவாளன் அமைப்பின் நிர்வாக இயக்குனர் எஸ் மோகன் குமார் விழிப்புணர்வு உரையாற்றினார்.
மேகா பிரியதர்ஷினியின் என் மாய தேவதை சிறுகதை நூல் மற்றும் மணிகண்டனின் OTP (ஒன் டைம் படிங்க) நூல் வெளியீட்டு விழாவும் நடைபெற்றது மேலும் திருமுருகன் பூண்டி நகராட்சியின் 22 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் தோழர் எஸ் பார்வதி வாழ்த்துரை வழங்கினார், இறுதியில் த மு எ க ச துணை பொதுச்செயலாளர் தோழர் அ.லட்சுமிகாந்த் புத்தகத்தை வெளியிட்டு வாழ்த்துரை வழங்கினார் இந்த விழாவில் பெண்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment