இது குறித்து தனது கணவர் சரவணனுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்தார். அப்போது வீட்டிற்கு வந்த சரவணன் வீட்டில் உள்ள பொருட்களை பார்த்த போது விலை உயர்ந்த பாத்திரங்கள் காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து தாராபுரம் போலீசில் சரவணன் புகார் கொடுத்தார். வாலிபர் கைது இது தொடர்பான புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கருப்புசாமி வழக்குபதிவு செய்து குற்றவாளியை தேடி வந்தனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த உறவினரான முத்துசாமி மகன் இளங்கோ (வயது 22), என்பவர் தனது நண்பர் முத்துகுமார் (35) என்பவருடன் சேர்ந்து ராமாத்தாள் வீட்டின் மேல் ஏறி ஓட்டை பிரித்து இறங்கி இருவரும் பாத்திரங்களை திருடி சென்றதாக ஒப்புக் கொண்டனர்.
இதனையடுத்து தாராபுரம் குற்றப்பிரிவு போலீசார் அத்தை ராமாத்தாள் வீட்டியில் திருடிய இளங்கோவன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான நண்பர் முத்துகுமாைர தேடிவருகிறார்கள்.
No comments:
Post a Comment