திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒன்றியம் கொழுமத்தில் கோட்டை மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இன்று சித்திரை திருவிழா நோன்பு சாட்டுதலுடன் துவங்கப்பட்டது. சுற்றுவட்டார கிராம பகுதிகளில் உள்ள மக்களுக்கு பிரதான கோவிலாக திகழ்வதால் இன்று முதல் 15 நாட்களுக்கு தினந்தோறும் சிறப்பு பூஜைகள், அலங்கார அபிஷேகம் மற்றும் அன்னதானங்கள் நடைபெற உள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவல் துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
No comments:
Post a Comment