தாராபுரம்-பொள்ளாச்சி சாலையில் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து இருக்கும். இந்த சாலையில் உள்ள எல்லீஸ் நகர் பகுதியை சுற்றி 200-க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்த நிலையில் தினசரி தாராபுரம் வட்டார பகுதியில் இருந்து காய்கறி கழிவுகள், ஓட்டலில் பயன்படுத்திய இலைகள், மருத்துவமனை கழிவுகள், கோழிக் கடையில் உருவாகும் இறைச்சி கழிவுகள் மற்றும் பல்வேறு கடைகளில் இருந்து உருவாகும் கழிவுகளை இரவு நேரங்களில் வாகனத்தில் கொண்டு வந்து சாலையில் கொட்டியும் வீசியும் செல்கின்றனர்.
அவ்வாறு கொட்டி விட்டு செல்லும் கழிவுகளை நாய்கள் இழுத்து சாலையில் போட்டு விட்டு செல்கிறது. இதனால் அந்த கழிவுகளிலிருந்து வரும் துர்நாற்றம் அந்த பகுதியில் குடியிருக்கும் மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை உருவாக்கி வருகிறது. மேலும் சாலையில் நடந்து செல்லும் மக்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் மூக்கை பிடித்தபடி செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
எனவே நெடுஞ்சாலை துறையினர் சாலையில் இருபுறமும் கொட்டியிருக்கும் குப்பைகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment